செய்திகள்

மீண்டும் இணையும் நடிகர் விஜய் - அட்லி கூட்டணி? ஏமாற்றத்தில் ரசிகர்கள்

30th Nov 2021 05:10 PM

ADVERTISEMENT

 

நடிகர் விஜய் தற்போது நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். அனிருத் இசையமைக்கும் இந்தப் படத்துக்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். 

இந்தப் படத்தையடுத்து தெலுங்கு இயக்குநர் வம்சி இயக்கும் படத்தில் நடிகர் விஜய் நடிக்கவிருக்கிறார். இந்தப் படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பாக தில் ராஜு தயாரிக்கிறார். தமன் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். குடும்ப உறவுகளை மையப்படுத்தி உருவாகும் இந்தப் படத்தில் நடிகர் பிரகாஷ் ராஜ் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். 

இதையும் படிக்க | புதிதாக ஒளிபரப்பாகவிருக்கும் 'வள்ளித் திருமணம்' தொடரின் நாயகி யார் தெரியுமா?

ADVERTISEMENT

இந்த நிலையில் இதனையடுத்து விஜய் நடிக்கும் அடுத்தப் படத்தை வெற்றிமாறன் இயக்குவார் என்று முதலில் கூறப்பட்டது. தற்போது புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. நடிகர் விஜய்யின் 68வது படத்தை இயக்குநர் அட்லி இயக்கவிருக்கிறாராம்.

இதனையடுத்து தளபதி 68 என்ற ஹேஷ்டேக் சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது. வெற்றிமாறன் இயக்கினால் வித்தியாசமான விஜய்யை காணலாம் என்று எதிர்பார்த்து வந்த ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். 

Tags : Atlee Vijay Thalapathy Vijay Thalapathy 68
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT