செய்திகள்

மகாராஷ்டிரத்தில் பொதுவெளியில் திரையிடப்பட்ட 'ஜெய் பீம்': ஆரவாரத்துடன் கண்டுகளித்த மக்கள்

29th Nov 2021 04:54 PM

ADVERTISEMENT

 

சூர்யா தயாரித்து நடித்து கடந்த நவம்பர் 2 ஆம் தேதி வெளியான ஜெய் பீம் திரைப்படம் அமேசான் பிரைமில் வெளியாகி விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. இந்தப் படம் குறித்து இந்தியா முழுவதும் உள்ள திரையுலக மற்றும் அரசியல் பிரபலங்கள் ஜெய் பீம் படத்தை பாராட்டி கருத்து தெரிவித்து வருகின்றனர். 

இந்த நிலையில் மஹாராஷ்டிரா மாநிலத்தில் லட்டூர் என்ற பகுதியில் பொதுவெளியில் ஜெய் பீம் படம் திரையிடப்பட்டது. மக்கள் கூட்டமாக அமர்ந்து ஜெய் பீம் படத்தை கண்டுகளிக்கின்றனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் விடியோக்கள் இணையத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. 

இதையும் படிக்க  | 'மாநாடு' படத்துக்கு 3 நாட்களில் இவ்வளவு வசூலா?: தயாரிப்பாளர் அதிகாரப்பூர்வ தகவல்

ADVERTISEMENT

உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகியிருந்த ஜெய் பீம் திரைப்படம் தமிழ் நாட்டில் கடந்து இரு வாரங்களுக்கும் மேலாக பேசுபொருளாக இருந்து வருகிறது. இந்தப் படத்தில் சமூகத்தை தவறாக சித்திரித்தாக பிரச்னை எழுந்தது குறிப்பிடத்தக்கது. 

ஞானவேல் இந்தப் படத்தை எழுதி இயக்கியிருந்தார். இந்தப் படத்தில் சூர்யாவுடன், மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ், ரஜிஷா விஜயன், பிரகாஷ் ராஜ், எம்.எஸ்.பாஸ்கர், ராவ் ரமேஷ், குரு சோமசுந்தரம், தமிழ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஷான் ரோல்டன் இசையமைத்துள்ள இந்தப் படத்துக்கு எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவு செய்துள்ளார். 

Tags : Jyothika Jyotika Suriya maharastra Jai Bhim
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT