செய்திகள்

'ருத்ர தாண்டவம்' படத்துக்கு விருதா? ஆச்சரியத்தில் ரசிகர்கள்

29th Nov 2021 08:15 PM

ADVERTISEMENT

 

இயக்குநர் மோகன்.ஜி இயக்கத்தில் ரிச்சர்டு ரிஷி, தர்ஷா குப்தா, கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி வெளியான படம் ருத்ர தாண்டவம். இந்தப் படம் விமர்சகர்களைக் கவரவில்லை. 

மேலும் சாதிய பிரச்னைகள் தவறான கண்ணோட்டத்தில் காட்டப்பட்டிருப்பதாக விமர்சனங்கள் எழுந்தது. இருப்பினும் இந்தப் படம் வட மாவட்டங்களில் நல்ல வசூலைப் பெற்றதாக கூறப்படுகிறது. 

இதையும் படிக்க | கறுப்பு வெள்ளை கலர்: இவர் கீர்த்தி சுரேஷ் அல்ல!

ADVERTISEMENT

இந்தப் படத்தில் ரிச்சர்டு ரிஷிக்கு ஜோடியாக குக் வித் கோமாளி மூலம் பிரபலமான தர்ஷா குப்தா நடித்திருந்தார். இந்த நிலையில் அவருக்கு ஃபேப் ஸ்டார்ஸ் ஐகானிக் அவார்ட்ஸ் சார்பாக சிறந்த அறிமுக நடிகைக்கான விருது வழங்கப்பட்டுள்ளது. இதனை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Dharsha (@dharshagupta)

Tags : Darsha Gupta Rudra Thandavam Mohan.G
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT