செய்திகள்

பிரபல பாடகியின் தந்தை மர்ம மரணம்: தண்டவாளத்தில் உடல் கிடந்ததால் பரபரப்பு

27th Nov 2021 04:19 PM

ADVERTISEMENT

 

பின்னணி பாடகியாக தெலுங்கு சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானவர் ஹரினி ராவ். இவரது குடும்பத்திநர் தெலங்கானா மாநிலம் ஹைதரபாத்தில் உள்ள ஸ்ரீநகர் காலனியில் வசித்து வருகிறார்கள். 

இந்த நிலையில் ஹரினியின் அப்பா ஏகே ராவ் தொழில் சம்மந்தமாக கடந்த 13 ஆம் தேதி பெங்களூர் சென்றிருக்கிறார். அங்கே ஒரு விடுதி அறியைில் தங்கியிருக்கிறார். இந்த நிலையில் கடந்த 21 ஆம் தேதி தனது அறையை விட்டு வாடகைக் காரில் சென்ற அவர் பின்னர் அறைக்கு திரும்பவில்லை. 

இந்த நிலையில் அவர் எலஹன்கா மற்றும் ராஜனுகுண்டே ரயில் நிலையங்களுக்கு இடையில் உள்ள தண்டவாளத்தில் இறந்து கிடந்துள்ளார். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

ADVERTISEMENT

இதையும் படிக்க | நடிகர் அஜித்தின் 'தல 61': உடைந்த கூட்டணி: வருத்தத்தில் ரசிகர்கள்: என்ன நடந்தது?

அவரது நெற்றி மற்றும் கழுத்துப் பகுதிகளில் காயம் இருந்துள்ளது. அவரது உடலுக்கு அருகே கத்தி மற்றும் கத்திரிகோல் இருந்துள்ளது. அவரது மரணம் கொலையாக இருக்கலாமோ என்ற சந்தேகத்தில் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். 

Tags : Harini Harini Roa Dead Hyderabad AK Rao
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT