செய்திகள்

ரம்யா கிருஷ்ணனை பிக்பாஸ் தொகுப்பாளராக அறிமுகப்படுத்திய கமல்: ஏன் ?

27th Nov 2021 05:23 PM

ADVERTISEMENT

 

நடிகர் கமல்ஹாசனுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல் நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. 

இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது யார் என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்தது. ரசிகர்கள் பலரும் தங்களது யூகங்களை சமூக வலைதளங்களின் வாயிலாக தெரிவித்து வந்தனர். இதனையடுத்து விஜய் டிவி வெளியிட்டுள்ள ப்ரமோவில் தோன்றும் கமல் ரம்யா கிருஷ்ணனை தொகுப்பாளராக அறிமுகப்படுத்துகிறார்.

இதையும் படிக்க | 'மாநாடு' படத்தின் இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?: தயாரிப்பாளர் தகவல்

ADVERTISEMENT

அப்போது பேசும் அவர், ''மக்களுடன் பேசுவதற்காக மருத்துவமனையில் இருந்து பேசுவது உங்கள் நான். தொய்வில்லாமல் இந்த நிகழ்ச்சியை நீங்கள் கண்டுகளிக்க ஒரு தோழி எனக்கு உதவிசெய்யவிருக்கிறார். அவரை உங்களுக்கு அறிமுகப்படுத்துவதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன் என்று தெரிவித்தார். அப்போது பிக்பாஸ் அரங்குக்கு ரம்யா கிருஷ்ணன் நடந்து வருகிறார். 


 

Tags : Bigg Boss Kamal Haasan Vijay TV ramya krishnan
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT