செய்திகள்

நடிகர் அஜித்தின் 'தல 61': உடைந்த கூட்டணி: வருத்தத்தில் ரசிகர்கள்: என்ன நடந்தது?

27th Nov 2021 11:41 AM

ADVERTISEMENT

 

நடிகர் அஜித் தற்போது வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்துள்ளார். போனி கபூர் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்தப் படம் அடுத்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு திரைக்கு வரவிருக்கிறது. 

இதனையடுத்து நடிகர் அஜித் மீண்டும் வினோத்துடன் இணையவிருக்கிறார். இந்தப் படத்தையும் போனி கபூர் தயாரிக்கிறார். இந்தப் படத்துக்கும் யுவன் ஷங்கர் ராஜாவே இசையமைப்பார் என்று கூறப்பட்டது. 

இதையும் படிக்க | சிம்புவின் 'மாநாடு': வெங்கட் பிரபுவுக்கு போன் செய்த ரஜினிகாந்த்: என்ன சொன்னார் தெரியுமா ?

ADVERTISEMENT

தல 61 என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கவிருக்கிறாராம். இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது யுவன் ரசிகர்களை வருத்தமடைய செய்துள்ளது. எதற்காக இந்த மாற்றம் என்று தெரியவில்லை. வலிமை பட வேற மாறி பாடல் யூடியூபில் 3.5 கோடி பார்வையாளர்களைப் பெற்றுள்ளது. மேலும், தற்போது வெளியான மாநாடு படத்திலும் யுவனின் பின்னணி இசைக்கும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. 

Tags : Maanaadu Thala 61 Yuvan Shankar Raja Valimai Anirudh Vinoth Ajith Kumar Thala Ajith
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT