செய்திகள்

நாளை வெளியாகிறது தனுஷின் ஹிந்திப் படமான 'அட்ராங்கி ரே' டிரெய்லர் : தனுஷ் என்ன வேடத்தில் நடிக்கிறார் தெரியுமா ?

23rd Nov 2021 01:00 PM

ADVERTISEMENT

 

'ராஞ்சனா' படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குநர் ஆனந்த் எல்.ராய் உடன் தனுஷ் இணைந்திருக்கும் படம் 'அட்ராங்கி ரே'. இந்தப் படத்தில் தனுஷுடன் இணைந்து அக்ஷய் குமார், சாரா அலிகான் உள்ளிட்டோர் முதன்மை வேடத்தில் நடித்துள்ளனர். 

ஏ.ஆர்.ரஹ்மான் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். இந்தப் படம் நேரடியாக டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகவுள்ளது. இந்த நிலையில் இந்தப் படத்தின் டிரெய்லர் நாளை(25.11.2021) வெளியாகவுள்ளதாக தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். 

இதையும் படிக்க | கணவரைப் பிரிகிறாரா பிரியங்கா சோப்ரா ?: சமூக வலைதளங்களில் பெயர் மாற்றத்தால் பரபரப்பு

ADVERTISEMENT

இந்தப் படத்தில் தனுஷ் விஷு என்ற வேடத்தில் நடிக்கிறார். இதற்கான ப்ரமோ விடியோவையும் வெளியிட்டுள்ளார்.  மேலும் தனுஷ் தெரிவித்ததாவது, ''இந்தப் படம் என் மனதுக்கு மிக நெருக்கமான படம். என் மேல் நம்பிக்கை வைத்த இயக்குநர் ஆனந்த் எல். ராய்க்கு நன்றி.

இந்தப் படத்தின் முதுகெலும்பாக இருக்கும் ஏ.ஆர்.ரஹ்மானுக்கும் எனது நன்றி''என்று தெரிவித்துள்ளார். 'அட்ராங்கே ரே' திரைப்படம் வருகிற டிசம்பர் 24 ஆம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகவுள்ளது. 
 

Tags : Atrangi Re Dhanush AR Rahman A.R.Rahman Sara Ali Khan Akshay Kumar
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT