செய்திகள்

'டான்' படம் குறித்து சிவகார்த்திகேயன் வெளியிட்ட தகவல்: ரசிகர்கள் மகிழ்ச்சி

9th Nov 2021 03:42 PM

ADVERTISEMENT

 

டாக்டர் திரைப்படத்தின் பெரும் வெற்றிக்குப் பிறகு நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வரும் படம் டான். அறிமுக இயக்குநரான சிபி சர்க்ரவர்த்தி இயக்கிவரும் இத்திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். 

டாக்டர் திரைப்படத்தைத் தொடர்ந்து சிவகார்த்திகேயனின் எஸ்கே புரொடக்‌ஷன்ஸ் டான் படத்தையும் தயாரிக்கிறது. லைகா நிறுவனம் இதனை வெளியிடுகிறது.

டாக்டர் படத்தில் சிவகார்த்திகேயனுடன் நடித்த பிரியங்கா மோகன் இந்த படத்திலும் ஜோடி சேர்ந்துள்ளார். மேலும், எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி, சூரி போன்ற முன்னணி நடிகர்களும் சிவகார்த்தியேகனுடன் நடித்து வருகின்றனர். 

ADVERTISEMENT

முழுக்க நகைச்சுவையை மையமாக கொண்டு உருவாகும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்த நிலையில், அதன் டப்பிங் பணிகள் நடைபெற்று வருகின்றன. 

இந்நிலையில் டப்பிங் செய்யும்போது எடுத்த புகைப்படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் இணையத்தில் வெளியிட்டுள்ளார். 

அதில் அடாது மழையிலும் விடாது டப்பிங் என்று மழைகாலத்திலும்  தொடர்ந்து பணிபுரிந்து வருவதைக் குறிப்பிட்டுள்ளார். 

மேலும், இத்திரைப்படத்தின் அனுபவங்கள் தனது கல்லூரி நள்களை நினைவூட்டியதாகவும் நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் அவரது ரசிகர்களால் வெகுவாக பகிரப்பட்டு வருகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT