செய்திகள்

இளையராஜா, யுவன் இசையமைத்த மாமனிதன்: 2-வது பாடல் வெளியானது!

28th May 2021 11:45 AM

ADVERTISEMENT

 

இளையராஜா - யுவன் இசையமைத்த மாமனிதன் படத்தின் 2-வது பாடலான ஏ ராசா இன்று வெளியாகியுள்ளது. 

யுவன் சங்கர் ராஜாவின் தயாரிப்பில் விஜய் சேதுபதி நடித்துள்ள மாமனிதன் படத்தை இயக்கியுள்ளார் சீனு ராமசாமி. தென்மேற்குப் பருவக்காற்று, தர்மதுரை, இடம் பொருள் ஏவல் என சீனு ராமசாமி இயக்கிய மூன்று படங்களில் விஜய் சேதுபதி நடித்துள்ளார். இருவரும் இணைந்துள்ள நான்காவது படமிது. இளையராஜா - யுவன் ஷங்கர் ராஜா ஆகிய இருவரும் இணைந்து இப்படத்துக்கு இசையமைத்துள்ளார்கள். இந்தப் படத்தின் படப்பிடிப்பு 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதமே முடிவடைந்துவிட்டது. மாமனிதன் படத்துக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி உயர் நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது. இதனால் இந்தப் படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இளையராஜா - யுவன் இசையமைத்த தட்டிப்புட்டா பாடல் சமீபத்தில் வெளியானது. இளையராஜா பாடிய இப்பாடலை பா. விஜய் எழுதியிருந்தார்.

ADVERTISEMENT

இந்நிலையில் இப்படத்தில் இடம்பெற்றுள்ள ஏ ராசா என்கிற பாடல் இன்று வெளியாகியுள்ளது. பா. விஜய் எழுதியுள்ள இப்பாடலின் விடியோவில் யுவன் சங்கர் ராஜா பாடி நடித்துள்ளார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT