செய்திகள்

ஜேம்ஸ் பாண்ட் படம் ஓடிடியில் நேரடியாக வெளியாகிறதா?: தயாரிப்பு நிறுவனம் பதில்

28th May 2021 10:38 AM

ADVERTISEMENT

 

ஜேம்ஸ் பாண்ட் பட வரிசையில் 25-வதாக வெளிவரவுள்ள படம் - நோ டைம் டு டை. 

டேனியல் கிரைய்க் நடிப்பில் கேரி ஜோஜி இயக்கியுள்ளார். 

1962-ல் முதல் ஜேம்ஸ் பாண்ட் படமாக டாக்டர் நோ வெளிவந்தது. கடைசியாக 2015-ல் டேனியல் கிரைய்க் நடிப்பில் ஸ்பெக்டர் வெளிவந்தது. அப்படத்தை சாம் மெண்டிஸ் இயக்கினார். 

ADVERTISEMENT

மிகவும் புகழ்பெற்ற ஹாலிவுட் தயாரிப்பு நிறுவனமான எம்ஜிஎம்-மை 61 ஆயிரத்து 375 கோடிக்கு (8.45 பில்லியன் டாலர்) வாங்கியுள்ளது அமேசான் நிறுவனம்.

பல ஜேம்ஸ் பாண்ட் படங்களை எம்ஜிஎம் நிறுவனம் வெளியிட்டுள்ளது. நோ டைம் டு டை படத்தையும் அமெரிக்காவில் எம்ஜிஎம் நிறுவனம் தான் வெளியிடுகிறது.

இந்நிலையில் எம்ஜிஎம் நிறுவனத்தை அமேசான் நிறுவனம் விலைக்கு வாங்கியதால் நோ டைம் டு டை படம் நேரடியாக அமேசான் பிரைம் விடியோ ஓடிடியில் வெளியாகும் எனத் தகவல் வெளியாகின. ஆனால் நோ டைம் டு டை படத்தை உலகம் முழுக்க திரையரங்குகளில் தான் வெளியிடுவோம் எனப் படத்தின் தயாரிப்பாளர்கள் பார்பரா மற்றும் மைக்கேல் ஜி. வில்சன் கூறியுள்ளார்கள்.  

நோ டைம் டு டை படம் உலகம் முழுக்க அக்டோபர் 8 அன்று வெளிவருகிறது.

ADVERTISEMENT
ADVERTISEMENT