செய்திகள்

டாம் குரூஸ் படத்தில் பிரபாஸ் நடிக்கிறாரா?: ஹாலிவுட் இயக்குநர் பதில்

27th May 2021 04:15 PM

ADVERTISEMENT

 

டாம் குருஸுடன் இணைந்து மிஷன் இம்பாசிபிள் 7 படத்தில் பிரபாஸ் நடிப்பதாக வெளியான தகவல்களை அப்படத்தின் இயக்குநர் மறுத்துள்ளார்.

பாகுபலி 2 படத்துக்குப் பிறகு சாஹோ படத்தில் நடித்தார் பிரபாஸ்.  இதற்கு அடுத்ததாக ராதே ஷ்யாம் என்கிற படத்தில் நடித்துள்ளார். மேலும் - ஆதிபுருஷ், சலார், தீபிகா படுகோனுடன் ஒரு படம் என பல படங்களில் நடித்து வருகிறார். பாகுபலி 2, சாஹோ படங்களுக்கு அடுத்து பிரபாஸ் நடிக்கும் அனைத்து படங்களும் ஹிந்தியிலும் வெளியாகும் விதத்தில் உருவாக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் டாம் குரூஸ் நடிக்கும் மிஷன் இம்பாசிபிள் 7 படத்தில் பிரபாஸும் நடிக்கிறார் எனத் தகவல்கள் வெளியாகின. ராதே ஷ்யாம் படத்தின் படப்பிடிப்புக்காக இத்தாலி சென்றபோது அங்கு மிஷன் இம்பாசிபிள் இயக்குநர் கிறிஸ்டோபர் மெக்குயரி-யைச் சந்தித்ததாகவும் அப்போது கதையைக் கேட்டு படத்தில் நடிக்க பிரபாஸ் சம்மதித்ததாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. 

ADVERTISEMENT

எனினும் இயக்குநர் கிறிஸ்டோபர் மெக்குயரி, இத்தகவல்களை மறுத்துள்ளார். ரசிகர் ஒருவரிடம் ட்விட்டரில் இதுபற்றி கேள்வி எழுப்பினார். அதற்கு கிறிஸ்டோபர் பதில் அளித்ததாவது:

அவர் மிகத்திறமையானவர். நாங்கள் இருவரும் சந்தித்துக்கொண்டதே இல்லை. இணையத்துக்கு நல்வரவு என்று கூறியுள்ளார். 

Tags : Prabhas Mission Impossible 7
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT