செய்திகள்

கரோனா நோயாளிகளுக்காக ஆசிரமம் திறந்த இயக்குநர் லிங்குசாமி: தொடக்க விழாவில் உதயநிதி, கீர்த்தி சுரேஷ் பங்கேற்பு

27th May 2021 03:36 PM

ADVERTISEMENT

 

லிங்குசாமி இயக்கிய முதல் படமான ஆனந்தம், 2001 மே 26 அன்று வெளியானது.

திரையுலகில் 20 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி கரோனா நோயாளிகளுக்கான ஆசிரமம் ஒன்றை திறந்துள்ளார் லிங்குசாமி. சென்னை மணப்பாக்கத்தில் இந்த ஆசிரமம் செயல்பட்டு வருகிறது. இந்த ஆசிரமத்தின் திறப்பு விழாவில் உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ் போன்றோர் கலந்துகொண்டார்கள். 

ஆனந்தம், ரன், ஜி, சண்டக்கோழி, பையா, வேட்டை, அஞ்சான், சண்டகோழி 2 ஆகிய படங்களை இயக்கியவர் லிங்குசாமி. சண்டக்கோழி 2 படத்தை 2018-ல் இயக்கிய லிங்குசாமி அடுத்த படத்துக்குத் தயாராகிவிட்டார். தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனி கதாநாயகனாக நடிக்கும் படத்தை லிங்குசாமி அடுத்ததாக இயக்குகிறார். இந்தப் படம் தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகிறது.

ADVERTISEMENT

Tags : Lingusamy COVID19 ashram
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT