செய்திகள்

கமல் - சரிகா பிரிந்ததில் மகிழ்ச்சியே: ஷ்ருதி ஹாசன்

26th May 2021 02:45 PM

ADVERTISEMENT

 

தனது பெற்றோரின் மணமுறிவு குறித்து நடிகை ஷ்ருதி ஹாசன் பேட்டியளித்துள்ளார்.

கமல் ஹாசனும் நடிகை சரிகாவும் 1988-ல் திருமணம் செய்துகொண்டார்கள். இவர்களுக்கு ஷ்ருதி, அக்‌ஷரா என இரு மகள்கள் உள்ளார்கள். 2004-ல் கருத்துவேறுபாடு காரணமாக கமலும் சரிகாவும் பிரிந்தார்கள். 

இந்நிலையில் தனது பெற்றோரின் மணமுறிவு பற்றி நடிகை ஷ்ருதி ஹாசன் ஒரு பேட்டியில் கூறியதாவது:

ADVERTISEMENT

அவர்கள் இருவரும் (கமல், சரிகா) பிரிந்ததில் எனக்கு மகிழ்ச்சியே. ஏனெனில் தம்பதியரிடையே கருத்துவேறுபாடுகள் தோன்றிவிட்டால் ஏதோவொரு காரணத்துக்காக சேர்ந்து வாழ கட்டாயப்படுத்தக்கூடாது. அவர்கள் இருவரும் அற்புதமான பெற்றோராக உள்ளார்கள். நான் என் தந்தையுடன் நெருக்கமாக உள்ளேன். அம்மா நலமாக உள்ளார். எங்கள் வாழ்க்கையில் அவரும் ஓர் அங்கம். அவர்கள் இருவரும் பிரிந்தபோது நான் சின்னப்பெண். ஒன்றாக வாழ்ந்த காலத்தில் மகிழ்ச்சியாக இருந்ததை விடவும் பிரிந்த பிறகு அவர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் என்றார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT