செய்திகள்

முதலில் எனக்கும் சந்தேகம் இருந்தது: கரோனா தடுப்பூசி பற்றி பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளர் டிடி

21st May 2021 05:48 PM

ADVERTISEMENT

 

பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளர் டிடி, கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளார்.

நாட்டில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் கடந்த ஜனவரி மாதம் 16-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றன. திரைப்பட மற்றும் தொலைக்காட்சிப் பிரபலங்கள் பலரும் கரோனா தடுப்பூசியைச் செலுத்திக்கொண்டு வருகிறார்கள்.

இந்நிலையில் பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளர் டிடி என்கிற திவ்யதர்ஷினி, கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளார். இதுபற்றி ட்விட்டரில் அவர் கூறியதாவது:

ADVERTISEMENT

தடுப்பூசி செலுத்திக்கொள்வதா வேண்டாமா என உங்களைப் போலவே எனக்கும் சந்தேகம் இருந்தது. நான் உடல்நலத்துக்காக மருந்துகள் எடுத்து வருகிறேன். ஆனால் தடுப்பூசி செலுத்திக்கொள்வது மட்டும் தான் 3-வது அலையிலிருந்து நம்மைக் காப்பாற்றும் என என்னுடைய மருத்துவர் கூறினார். எனவே தற்போது எடுத்து வரும் மருந்துகளை நிறுத்திக்கொண்டு, கோவிஷீல்ட் தடுப்பூசியைச் செலுத்திக்கொண்டுள்ளேன். நீங்கள் இதுபற்றி முடிவெடுப்பது தொடர்பாக உங்கள் மருத்துவரிடம் மட்டுமே கலந்தாலோசிக்கவும் என்று கூறியுள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT