செய்திகள்

சமந்தா நடித்த தி ஃபேமிலி மேன் 2 இணையத் தொடர்: டிரெய்லர் வெளியானது

19th May 2021 12:23 PM

ADVERTISEMENT

 

தி ஃபேமிலி மேன் 2 இணையத் தொடரின் டிரெய்லர் இன்று வெளியாகியுள்ளது. 

2019 செப்டம்பரில் அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியான தி ஃபேமிலி மேன் இணையத் தொடர் ரசிகர்களின் பாராட்டைப் பெற்றது. மனோஜ் பாஜ்பாய், பிரியா மணி நடித்த இத்தொடரை ராஜ் & டி.கே. இயக்கியிருந்தார்கள்.

இந்நிலையில் தி ஃபேமிலி மேன் இணையத் தொடரின் 2-வது பாகம் உருவாகியுள்ளது. இதில் இலங்கைத் தமிழராக நடிகை சமந்தா நடித்துள்ளார். தி ஃபேமிலி மேன் 2 ஜூன் 4 அன்று அமேசான் பிரைம் ஓடிடியில் ஹிந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. 

ADVERTISEMENT

இந்த அறிவிப்புடன் தி ஃபேமிலி மேன் 2 இணையத் தொடரின் டிரெய்லரும் இன்று வெளியாகியுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT