செய்திகள்

கரோனா நிவாரண நிதி: ரூ. 25 லட்சம் வழங்கிய நடிகர் நெப்போலியன்

19th May 2021 01:50 PM

ADVERTISEMENT

 

தமிழக அரசின் கரோனா நிவாரண நிதிக்கு ரூ. 25 லட்சம் வழங்கியுள்ளார் நடிகர் நெப்போலியன்.

அதிகரித்து வரும் கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நிதியுதவி அளிக்குமாறு முதல்வா் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தாா். அதன் அடிப்படையில் திரைத்துறையினர் பலரும் நிவாரண நிதியை வழங்கி வருகிறார்கள்.

இந்நிலையில் தமிழக முதல்வரின் கரோனா தடுப்பு பொது நிவாரண நிதிக்கு ரூ. 25 லட்சம் வழங்கியுள்ளார் நடிகர் நெப்போலியன். அவர் சார்பாக ஜீவன் டெக்னாலஜிஸ் நிறுவனம் மற்றும் ஜீவன் அறக்கட்டளையைச் சேர்ந்தவர்கள் ரூ. 25 லட்சத்துக்கான காசோலையை முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் வழங்கினார்கள். 

ADVERTISEMENT

சமீபத்தில் வெளியான சுல்தான் படத்தில் நெப்போலியன் நடித்திருந்தார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT