செய்திகள்

முள்ளிவாய்க்கால் கொடூர நினைவுகள் நம்மைத் தொடர்ந்து உலுக்கும்: இசையமைப்பாளர் இமான்

18th May 2021 05:01 PM

ADVERTISEMENT

 

முள்ளிவாய்க்கால் கொடூர நினைவுகள் நம்மை தொடர்ந்து உலுக்கிக்கொண்டு கொண்டே இருக்கும் என இசையமைப்பாளர் இமான் கூறியுள்ளார்.

விடுதலைப் புலிகளுடனான உள்நாட்டுப் போர், 2009 மே 18-ல் முடிவுற்றதாக அப்போதைய இலங்கை அதிபர் மகிந்த ராஜபட்ச அறிவித்தார். முள்ளிவாய்க்கால் இறுதிப்போரின் 12-ம் ஆண்டு நினைவையொட்டி பிரபல இசையமைப்பாளர் டி. இமான் ட்விட்டரில் ஒரு பதிவு எழுதியுள்ளார். அதில் அவர் கூறியதாவது:

மே 18 - தமிழர்களின் வாழ்வில் எதிர்வரும் தலைமுறைகளால் ஒருபோதும் மறக்க முடியாத நாள். முள்ளிவாய்க்கால் கொடூர நினைவுகள் நம்மை தொடர்ந்து உலுக்கிக்கொண்டு கொண்டே இருக்கும். மரணித்த ஆன்மாக்களின் அழுகுரல் மலையளவு ஊக்கத்தை நமக்குச் செலுத்தும். நம்பிக்கையோடும் அன்போடும் உழைக்கவும் மீண்டு வரவும் உதவும் என்று எழுதியுள்ளார். 

ADVERTISEMENT

Tags : imman May 18
ADVERTISEMENT
ADVERTISEMENT