செய்திகள்

சந்தோஷ் சிவன் இயக்கிய சர்ச்சைக்குரிய இனம் படம்: ஓடிடியில் வெளியாகிறது!

15th May 2021 03:52 PM

ADVERTISEMENT

 

சந்தோஷ் சிவன் இயக்கிய சர்ச்சைக்குரிய படமான இனம், விரைவில் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. 

பிரபல ஒளிப்பதிவாளரான சந்தோஷ் சிவன், 2014-ல் இனம் என்கிற படத்தை இயக்கினார். எஸ். கரண், சுகந்தா ராம், சரிதா நடித்துள்ள இப்படத்துக்கு இசை - விஷால் சந்திரசேகர். இலங்கைப் போரை மையமாகக் கொண்ட படம் என்பதால் தமிழ்நாட்டில் இப்படம் வெளியானபோது பலதரப்புகளில் இருந்தும் எதிர்ப்புகள் கிளம்பின. பிரபல இயக்குநர் லிங்குசாமி இப்படத்தை வெளியிட்டார். எதிர்ப்புகள் காரணமாக படம் வெளியான சில நாள்களில் திரையரங்குகளிலிருந்து படம் விலக்கிக்கொள்ளப்பட்டது. 

இலங்கைப் போரில் மாட்டிக்கொண்ட நான்கு இளைஞர்களைப் பற்றிய இந்தப் படம் ஓடிடியில் விரைவில் வெளியாகவுள்ளது. இனம் படத்தின் இயக்குநரும் ஒளிப்பதிவாளருமான சந்தோஷ் சிவன் ட்விட்டரில் இதுபற்றி கூறியதாவது:

ADVERTISEMENT

இனம் படத்தைப் பார்க்க விரும்புவர்களுக்கு - இப்படம் விரைவில் ஓடிடியில் வெளியாகவுள்ளது. முதலில் இனம் படத்தைப் பாருங்கள், தமிழக அரசிடமிருந்து வரிவிலக்கு பெற்ற படம் இது என்று கூறியுள்ளார். 

Tags : Santosh Sivan Inam OTT
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT