செய்திகள்

ரஜினி முருகன் பட நகைச்சுவை நடிகர் மரணம்

15th May 2021 05:53 PM

ADVERTISEMENT

 

வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் போன்ற படங்களில் நடித்த நகைச்சுவை நடிகர் பவுன்ராஜ் மாரடைப்பால் மரணமடைந்துள்ளார்.

வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் போன்ற படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்ததோடு இயக்குநர் பொன்ராமிடம் இணை இயக்குநராகவும் பணியாற்றியவர் பவுன்ராஜ். ரஜினி முருகன் படத்தில் இடம்பெற்று ரசிகர்களிடம் பாராட்டுகளைப் பெற்ற வாழைப்பழக் காட்சியில் வாழைப்பழத்தை உரித்து ஒட்டுமொத்தக் கடையையே காலி செய்யும் வேடத்தில் நடித்து பாராட்டுகளைப் பெற்றார்.

இந்நிலையில் மாரடைப்பால் பவுன்ராஜ் மரணமடைந்துள்ளார். இதுபற்றி இயக்குநர் பொன்ராம் ட்விட்டரில் கூறியதாவது:

ADVERTISEMENT

வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் போன்ற படங்களில் நடித்தவரும் எனது இணை இயக்குநருமான பவுன்ராஜ் மாரடைப்பால் இறந்து விட்டார். ஆழ்ந்த இரங்கல்கள் என்று கூறியுள்ளார். 

Tags : Sivakarthikeyan Rajini Murugan பவுன்ராஜ்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT