செய்திகள்

கரோனா நிவாரண நிதி: ரஜினி இளைய மகள் செளந்தர்யா தெரிவித்த தகவல் (படங்கள்)

14th May 2021 01:56 PM

ADVERTISEMENT

 

கரோனா நிவாரண நிதியை முதல்வர் ஸ்டாலினிடம் நேரில் வழங்கியதாக ரஜினியின் இளைய மகள் செளந்தர்யா ட்விட்டரில் தெரிவித்து அதன் புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார்.

கரோனா தொற்றிலிருந்து பொதுமக்களைப் பாதுகாக்க முதல்வரின் நிவாரண நிதிக்கு தராளமாக உதவ வேண்டும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்தாா். அதன் அடிப்படையில் திரைத்துறையினர் பலரும் நிவாரண நிதியை வழங்கி வருகிறார்கள்.

கரோனா நிவாரணமாக, தனது கணவர் விசாகன் நடத்தி வரும் அபெக்ஸ் பார்மசி நிறுவனம் சார்பாக ரஜினியின் இளைய மகள் செளந்தர்யா ரூ. 1 கோடி நிதியுதவி அளித்துள்ளார். இதுபற்றி ட்விட்டரில் செளந்தர்யா கூறியதாவது:

ADVERTISEMENT

எனது மாமனார் வணங்காமுடி, கணவர் விசாகன், அவருடைய சகோதரி மற்றும் நானும் முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று காலை நேரில் சந்தித்து, கரோனா நிவாரண நிதிக்கு ஜின்கோவிட் தயாரிக்கும் அபெக்ஸ் நிறுவனம் சார்பாக ரூ. 1 கோடியை வழங்கினோம் என்றார். இத்தகவலுடன் புகைப்படங்களையும் அவர் பகிர்ந்துள்ளார். 

ADVERTISEMENT
ADVERTISEMENT