செய்திகள்

தமிழில் படித்தால் நிச்சயம் வேலை: முதல்வருக்கு நடிகர் சிவகுமார் கோரிக்கை (விடியோ)

DIN

தமிழகத்தில் ஸ்டாலின் ஆட்சிக்காலம் பொற்காலம் என்று சொல்வதுபோல் ஒரு நல்லாட்சியை வழங்குங்கள் என்று தமிழக முதல்வராக இன்று பதவியேற்றிருக்கும் மு.க. ஸ்டாலினுக்கு மூத்த நடிகர் சிவகுமார் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் இன்று பதவியேற்றார். கிண்டியில் உள்ள ஆளுநா் மாளிகையில் பதவியேற்பு விழா நடைபெற்றது. 

இதையடுத்து தமிழக முதல்வருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ள மூத்த நடிகர் சிவகுமார், விடியோவில் மேலும் கூறியதாவது:

முதலமைச்சர் அவர்களுக்கு முதலில் எனது வேண்டுகோள். கரோனா காலத்திலிருந்து நம் மக்களைக் காப்பாற்றுங்கள். மக்கள் கூட்டம் கூட்டமாக மருத்துவமனைகளிலும் மருந்துக் கடைகளிலும் காலையில் இருந்து மாலை வரைக்கும் நிற்பது மனதுக்குக் கடினமாக உள்ளது. மருத்துவமனையில் படுக்கைகள் இல்லை, படுக்கைகள் இருந்தால் ஆக்சிஜன் இல்லை. ஆக்சிஜன் இருந்தால் வெண்டிலேட்டர் இல்லை. இந்த அவலத்திலிருந்து மக்களைக் காப்பாற்றுங்கள். 

ஆந்திராவில் வசிக்கும் யாராக இருந்தாலும் கட்டாயம் தெலுங்கு படித்தாக வேண்டும். கர்நாடகாவில் வசிக்கும் யாராக இருந்தாலும் கன்னடம் படித்தாக வேண்டும். கேரளாவில் வசிக்கும் யாராக இருந்தாலும் மலையாளம் படித்தாக வேண்டும். ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் தமிழ்க் குழந்தைகள் தமிழ் படிக்காமலேயே பி.ஏ. எம்.ஏ. படித்துவிட்டு வேலைக்குச் செல்லும் அவலமான நிலைமை இங்கே மட்டும் இருக்கிறது.

செம்மொழி மாநாடு நடத்தி தமிழுக்குப் பெருமை சேர்த்த முத்தமிழ் அறிஞரின் வாரிசு நீங்கள். இங்கே தமிழ் மொழியில் படித்து பட்டதாரி ஆனால் இங்கே நிச்சயம் வேலை உண்டு என்கிற நிலைமையை உண்டாக்கினால் தமிழ் நிச்சயமாக வாழும். ஏரி, குளங்களைப் பராமரித்து விவசாயம் செழிக்க உதவி செய்யுங்கள். கலைஞர் அறிமுகப்படுத்திய உழவர் சந்தைக்கு உயிர் கொடுங்கள். அரசியல் சாணக்கியர் கலைஞர் மடியில் வளர்ந்த நீங்கள், தமிழகத்தில் ஸ்டாலின் ஆட்சிக்காலம் பொற்காலம் என்று சொல்வதுபோல் ஒரு நல்லாட்சியை வழங்குங்கள். வாழ்த்துக்கள் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போராட்டம் கலைப்பு: மாணவர்கள் கைது!

கில்லி மறுவெளியீட்டு வசூல் இவ்வளவா?

மே 6-ல் திருச்சிக்கு உள்ளூர் விடுமுறை!

அமெரிக்க பல்கலை.களில் மாணவர்கள் - காவலர்கள் மோதல்: பாலஸ்தீன ஆதரவாளர்கள் கைது!

குருப்பெயர்ச்சி பலன்கள் - கன்னி

SCROLL FOR NEXT