செய்திகள்

கரோனாவிலிருந்து மீண்டார் பிரபல நடிகை பூஜா ஹெக்டே

6th May 2021 10:23 AM

ADVERTISEMENT

 

விஜய் - நெல்சன் கூட்டணியில் உருவாகும் படத்தில் கதாநாயகியாக நடிக்கும் பூஜா ஹெக்டே, கரோனா பாதிப்பிலிருந்து மீண்டுவிட்டார்.

மாஸ்டர் படத்துக்குப் பிறகு நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிக்கிறார். விஜய் - நெல்சன் கூட்டணியில் உருவாகும் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. விஜய்யின் 65-வது படத்துக்கு ஒளிப்பதிவு - மனோஜ் பரமஹம்சா. இசை - அனிருத்.

இப்படத்தின் கதாநாயகியாக பிரபல நடிகை பூஜா ஹெக்டே நடிக்கிறார். 2012-ல் மிஷ்கின் இயக்கிய முகமூடி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் பூஜா ஹெக்டே. இதன்பிறகு ஏராளமான தெலுங்குப் படங்களிலும் சில ஹிந்திப் படங்களிலும் நடித்துள்ளார். 

ADVERTISEMENT

பூஜா ஹெக்டேவுக்குக் கடந்த ஏப்ரல் 26 அன்று கரோனா வைரஸ் பாதிப்பு உறுதிசெய்யப்பட்டது. இந்நிலையில் கரோனா பாதிப்பிலிருந்து தான் மீண்டுவிட்டதாக அவர் தகவல் தெரிவித்துள்ளார். 

Tags : Pooja Hegde COVID 19
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT