செய்திகள்

ஒருதலை ராகம் பட தயாரிப்பாளர் இப்ராஹிம் காலமானார்

6th May 2021 04:31 PM

ADVERTISEMENT

 

டி. ராஜேந்தர் இயக்குநராக அறிமுகமாகிய ஒருதலை ராகம் படத்தின் தயாரிப்பாளர் ஈ.எம். இப்ராஹிம் இன்று காலமானார்.

1980-ல் வெளியான படம் ஒருதலை ராகம். டி.ஆரின் முதல் படமான இப்படத்தைத் தயாரித்தார் ஈ.எம். இப்ராஹிம். மயிலாடுதுறைக்கு அருகில் உள்ள வடகரையைச் சேர்ந்தவர்.

தயாரிப்பாளருக்கும் டி.ஆருக்கும் இடையிலான மோதலால் படத்தின் டைட்டில் கார்டில் இயக்கம் - இப்ராஹிம் என்றே குறிப்பிடப்பட்டிருந்தது. இளம் கலைஞர்கள், புதுமுகங்களைக் கொண்டு உருவான ஒருதலை ராகம் படம் தமிழ்த் திரையுலகில் புரட்சியை ஏற்படுத்தியது. திரையரங்குகளில் ஒரு வருடம் ஓடியது.

இந்நிலையில் உடல்நலக்குறைவால் தயாரிப்பாளர் ஈ.எம். இப்ராஹிம் இன்று காலமானார். 

ADVERTISEMENT

அவருடைய மறைவுக்கு டி. ராஜேந்தர் இரங்கல் தெரிவித்துக் கூறியதாவது:

1980ல் வெளியான எனது முதல் படமான ‘ஒருதலை ராகம்’ படத்தின் தயாரிப்பாளர் .இப்ராஹிம் மறைந்துவிட்டார் என்ற செய்தி என் இதயத்தில் ஈட்டியாகப் பாய்கிறது. அவரது ஆன்மா சாந்தி அடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன் என்றார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT