நவம்பர் ஸ்டோரி என்கிற இணையத்தொடரில் நடித்துள்ளார் தமன்னா.
ராம் சுப்ரமணியம் இயக்கியுள்ள இத்தொடர் ஹாட்ஸ்டாரில் வெளியாகிறது. நவம்பர் ஸ்டோரியைத் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் காண முடியும்.
தனது தந்தை மீது சுமத்தப்பட்ட கொலைக்குற்றத்திலிருந்து காப்பாற்றப் போராடும் அனுராதா என்கிற வலுவான கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். இது என் திரையுலக வாழ்வில் அற்புதமான அனுபவம். கொலையைச் செய்தது யார் என்கிற கேள்வியுடன் பரபரப்பான முறையில் நகரும் இந்தத் தொடரை ரசிகர்கள் நிச்சயம் வரவேற்பார்கள் என்று கூறியுள்ளார் தமன்னா.
ADVERTISEMENT
தமன்னா, பசுபதி, ஜி.எம். குமார், விவேக் பிரசன்னா நடித்துள்ள நவம்பர் ஸ்டோரி இணையத்தொடர், மே 20-ல் ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாகிறது.