செய்திகள்

என்னடி முனியம்மா பாடல் புகழ் டி.கே.எஸ். நடராஜன் காலமானார்

5th May 2021 05:08 PM

ADVERTISEMENT

 

என்னடி முனியம்மா கண்ணுல மைய்யி பாடலைப் பாடி புகழ்பெற்ற டி.கே.எஸ். நடராஜன் இன்று காலமானார். அவருக்கு வயது 87.

1933-ம் ஆண்டு பிறந்த நடராஜன், மேடை நாடகங்களில் நடித்ததுடன் நாட்டுப்புறப் பாடல்கள் மற்றும் திரைப்படப் பாடல்களைப் பாடியுள்ளார். டி.கே.எஸ். நாடகக் குழுவில் நடித்ததால் அவருடைய பெயருக்கு முன்னால் டி.கே.எஸ். என்கிற அடைமொழி சேர்ந்துகொண்டது. 1954-ல் ரத்த பாசம் என்கிற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். 

500-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்ததுடன் பல பாடல்களைப் பாடியுள்ளார். வாங்க மாப்பிள்ளை வாங்க படத்தில் சங்கர் கணேஷ் இசையில் வெளியான என்னடி முனியம்மா கண்ணுல மைய்யி பாடலால் மிகவும் புகழ் பெற்றார் டி.கே.எஸ். நடராஜன். 

ADVERTISEMENT

இன்று அதிகாலை 6.30 மணியளவில் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள தனது இல்லத்தில் டி.கே.எஸ். நடராஜன் உடல்நலக்குறைவால் காலமானார். 

Tags : Actor T K S Natarajan
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT