செய்திகள்

மு.க. ஸ்டாலினுக்கு நேரில் வாழ்த்து சொன்ன நடிகர் ஜெயராம் (படங்கள்)

5th May 2021 04:03 PM

ADVERTISEMENT

 

சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக கூட்டணி வெற்றிபெற்றுள்ள நிலையில், திமுக தலைவா் மு.க. ஸ்டாலினை நடிகர் ஜெயராம் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். 

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் திமுக தலைமையிலான கூட்டணி 159 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. திமுக மட்டும் 125 தொகுதிகளைக் கைப்பற்றியுள்ளது. சட்டப்பேரவையின் 234 தொகுதிகளில் ஆட்சியமைக்க 118 எம்எல்ஏக்கள் வரை பெற்றிருக்க வேண்டும். திமுக கூடுதல் தொகுதிகளைக் கைப்பற்றியுள்ள நிலையில், தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க உள்ளது. மு.க.ஸ்டாலின் மே 7-ல் முதல்வராகப் பதவியேற்க உள்ளாா். கிண்டியில் உள்ள ஆளுநா் மாளிகையிலேயே அமைச்சரவைப் பதவியேற்பு நடைபெற உள்ளது.

இந்நிலையில் தமிழக முதல்வராகப் பொறுப்பேற்கவிருக்கும் மு.க. ஸ்டாலினை நடிகர் ஜெயராம் மற்றும் அவரது மகனும் நடிகருமான காளிதாஸ் ஜெயராம் ஆகியோர் நேரில் சந்தித்து தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்தனர். அதன் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

Tags : DMK MK Stalin Chief Minister
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT