செய்திகள்

உதவி கேட்ட சில மணி நேரங்களில் சகோதரரை இழந்த நடிகை பியா

5th May 2021 05:49 PM

ADVERTISEMENT

 

நடிகை பியாவின் சகோதரர் கரோனாவால் மரணமடைந்துள்ளார். 

பொய் சொல்லப் போறோம் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார் பியா. ஏகன், கோவா, பலே பாண்டியா போன்ற தமிழ்ப் படங்களிலும் மலையாளம், தெலுங்கு, ஹிந்திப் படங்களிலும் நடித்துள்ளார். 

உத்தரப் பிரதேசத்தில் உள்ள பியாவின் சகோதரர் கரோனாவால் சமீபத்தில் பாதிக்கப்பட்டார். அவருடைய சிகிச்சைக்காக வென்டிலேட்டருடன் கூடிய படுக்கை அவசியம். சகோதரர் உயிருக்குப் போராடுகிறார் என சமூகவலைத்தளங்களில் உதவி கேட்டார் பியா. அதன்படி பாஜக எம்.எல்.ஏ. மூலமாக அவருக்கு உதவி கிடைத்தது. எனினும் இரண்டு மணி நேரத்துக்குப் பிறகு சகோதரர் இறந்துவிட்டார் என ட்வீட் செய்தார். 

ADVERTISEMENT

பியாவின் சகோதரரின் மறைவுக்கு ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளார்கள். 

Tags : Pia Bajpiee COVID 19
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT