செய்திகள்

நடிகை கங்கனா ரணாவத்தின் ட்விட்டர் கணக்கு முடக்கம்

4th May 2021 12:46 PM

ADVERTISEMENT

 

பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத்தின் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டுள்ளது.

67-வது தேசிய திரைப்பட விருதுகள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டன. கங்கனா ரணாவத், சிறந்த நடிகைக்கான விருதுக்குத் தேர்வாகியுள்ளார். பிரபல நடிகையாக உள்ள கங்கனா பெறும் 4-வது தேசிய விருது இது. தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் அவருடைய கதாபாத்திரத்தில்  கங்கனா ரணாவத் நடித்துள்ளார். 

தனது ட்விட்டர் பக்கத்தில் அரசியல் கருத்துகளைத் தொடர்ந்து தெரிவித்து வந்தார் கங்கனா. மேற்கு வங்கத் தேர்தல் மற்றும் அம்மாநிலத்தில் நடைபெற்ற வன்முறைச் சம்பவம் குறித்து கங்கனா தெரிவித்த கருத்துகள் அவருக்குச் சிக்கலை வரவழைத்துள்ளது.

ADVERTISEMENT

ட்விட்டர் விதிமுறைகளுக்கு மீறி செயல்பட்டதாக அவருடைய கணக்கு தற்போது முடக்கம் செய்யப்பட்டுள்ளது. 

Tags : Kangana Ranaut
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT