செய்திகள்

தமிழ்நாடு வரலாறு காணாத வளர்ச்சியடைய வேண்டும்: திமுக கூட்டணிக்கு ஏ.ஆர். ரஹ்மான் வாழ்த்து

3rd May 2021 03:31 PM

ADVERTISEMENT

 

இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கு ஓர் எடுத்துக்காட்டாய் திகழ வேண்டும் என திமுக கூட்டணிக்குப் பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப் பேரவைத் தோ்தலில் 150-க்கும் அதிகமான இடங்களில் திமுக கூட்டணி வெற்றி பெற்று தமிழகத்தின் புதிய முதல்வராக அந்தக் கட்சியின் தலைவா் மு.க. ஸ்டாலின், பொறுப்பேற்க உள்ளாா்; இதன் மூலம் 10 ஆண்டுகளுக்குப் பிறகு திமுக ஆட்சி அமைய உள்ளது. மேலும், திமுகவின் கூட்டணியில் அங்கம் வகித்த, காங்கிரஸ், மதிமுக ஆகிய கட்சிகளும் குறிப்பிடத்தக்க அளவு வெற்றியைப் பெற்றுள்ளன.

இந்நிலையில் திமுக கூட்டணிக்கு வாழ்த்து தெரிவித்து பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் ட்விட்டரில் கூறியதாவது:

ADVERTISEMENT

சமூக நீதி, கல்வி, சுகாதாரம் ஆகியவற்றில் தமிழ்நாடு வரலாறு காணாத வளர்ச்சியடைய,  இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்கு ஓர் எடுத்துக்காட்டாய்த் திகழ, தி.மு.க கூட்டணிக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள் என்றார்.

இதற்கு, தமிழக முதல்வராகப் பதவியேற்கவுள்ள திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பதில் அளித்ததாவது:

இசைப்புயல் - ஆஸ்கர் விருதாளரான தங்களின் வாழ்த்துகளுக்கு நெஞ்சார்ந்த நன்றி. தமிழக மக்கள் சார்பில் தாங்கள் வைத்துள்ள நம்பிக்கையை நிறைவேற்றிடும் வகையில் புதிய அரசு செயல்படும் என்றார்.

Tags : Tamil nadu AR rahman MK stalin
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT