செய்திகள்

விஜய் 65 பூஜை: படங்களை வெளியிட்டது சன் பிக்சர்ஸ்

31st Mar 2021 01:05 PM

ADVERTISEMENT

 

நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தின் பூஜை இன்று நடைபெற்றது.

மாஸ்டர் படத்துக்குப் பிறகு நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிக்கிறார். விஜய் - நெல்சன் கூட்டணியில் உருவாகும் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. விஜய்யின் 65-வது படத்துக்கு ஒளிப்பதிவு - மனோஜ் பரமஹம்சா. இசை - அனிருத்.

இப்படத்தின் கதாநாயகியாக பிரபல நடிகை பூஜா ஹெக்டே தேர்வாகியுள்ளார். பூஜா ஹெக்டே, 2012-ல் மிஷ்கின் இயக்கிய முகமூடி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இதன்பிறகு ஏராளமான தெலுங்குப் படங்களிலும் சில ஹிந்திப் படங்களிலும் நடித்துள்ளார். 

ADVERTISEMENT

விஜய் 65 படத்தின் பூஜை இன்று சென்னையில் நடைபெற்றுள்ளது. இந்த விழாவில் விஜய், நெல்சன் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துகொண்டார்கள். விஜய் 65 பட பூஜையின் புகைப்படங்களை சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ளது.

Tags : Vijay Pooja Hegde
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT