செய்திகள்

திமுகவுக்கு ஆதரவளிக்கும் பிரபல தொலைக்காட்சித் தொகுப்பாளர்

31st Mar 2021 04:35 PM

ADVERTISEMENT

 

திமுகவுக்கு அனைவரும் வாக்களிக்க வேண்டும் எனப் பிரபல தொலைக்காட்சித் தொகுப்பாளர் மகேஸ்வரி ட்விட்டரில் கூறியுள்ளார்.

தமிழக சட்டப்பேரவையின் பதவிக்காலம் மே 24-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தோ்தல் வாக்குப் பதிவு எண்ணிக்கை மே 2-ம் தேதி நடைபெறும்.

இந்நிலையில் பிரபல தொலைக்காட்சித் தொகுப்பாளர் மகேஸ்வரி, ட்விட்டரில் திமுகவுக்கு ஆதரவான ட்வீட்களை வெளியிட்டு வருகிறார். சில நாள்களுக்கு முன்பு ட்விட்டரில், திமுகவுக்கு வாக்களியுங்கள். எந்தவொரு இரவும் விடியும், சூரியன் உதிக்கும் என்று எழுதினார். இதன்பிறகு ட்விட்டரில் அவர் மேலும் கூறியதாவது:

ADVERTISEMENT

தமிழை கணிப்பொறியில் ஏற்றி உலக அரங்கில் தமிழர் வாழ்வின் விளக்கை ஏற்றிய திராவிடம்... திமுகவுக்கு வாக்களியுங்கள்...

அண்ணா மறுமலர்ச்சி திட்டம் மூலம் அனைத்து ஊராட்சிகளிலும் நூலகம் அமைத்து அனைத்து மாணவர்களும் பொது அறிவை வளர்த்து, போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்று, வாழ்க்கை தரத்தை உயர்த்தி கொள்ள உதவிய இயக்கம் திமுக, தலைவர் கலைஞர்.... திமுகவுக்கு வாக்களியுங்கள்... என்று எழுதியுள்ளார். 

Tags : DMK Maheswari
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT