செய்திகள்

ஹிந்தி சூரரைப் போற்று: ஏப்ரல் 4-ல் அமேசான் பிரைமில் வெளியாகிறது

31st Mar 2021 12:40 PM

ADVERTISEMENT

 

சூரரைப் போற்று படம் உடான் என்கிற பெயரில் ஹிந்தியில் டப் செய்யப்பட்டு அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாகவுள்ளது.

சூர்யா நடிப்பில் இறுதிச்சுற்று சுதா கொங்கராவின் இயக்கத்தில் உருவான சூரரைப் போற்று படம் கடந்த வருடம் தீபாவளிக்கு அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியானது. சூரரைப் போற்று, சூர்யாவின் 38-வது படம். கதாநாயகியாக மலையாள நடிகை அபர்ணா பாலமுரளி நடித்தார். இசை - ஜி.வி. பிரகாஷ். ஒளிப்பதிவு - நிகேத் பொம்மிரெட்டி. திரையரங்கில் வெளியாகாமல் நேரடியாக ஓடிடியில் வெளியானதால் பல்வேறு விமர்சனங்களை சூர்யா எதிர்கொண்டார். 

இந்நிலையில் சூரரைப் போற்று படம் ஹிந்தியில் உடான் என்கிற பெயரில் டப் செய்யப்பட்டு, ஏப்ரல் 4 அன்று அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியாகவுள்ளது. அதேபோல நானி நடித்த வி படமும் ஹிந்தியில் டப் செய்யப்பட்டு அதே தேதியில் அமேசான் பிரைமில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

ADVERTISEMENT

Tags : Soorarai Pottru HINDI
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT