செய்திகள்

பா. இரஞ்சித் இயக்கும் சார்பட்டா: கதாபாத்திரங்களை அறிமுகம் செய்யும் விடியோ வெளியீடு!

29th Mar 2021 11:10 AM

ADVERTISEMENT

 

அட்டகத்தி, மெட்ராஸ், கபாலி, காலா ஆகிய படங்களை இயக்கியுள்ளார் பா. இரஞ்சித். காலா படத்துக்குப் பிறகு பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப்போரின் கடைக்குண்டு ஆகிய படங்களைத் தயாரித்தார். 

ஆர்யா நடிக்கும் படத்தைத் தற்போது இயக்கியுள்ளார் பா. இரஞ்சித். குத்துச்சண்டை வீரராக ஆர்யா நடித்துள்ள இப்படத்துக்கு சார்பட்டா பரம்பரை எனப் பெயரிடப்பட்டுள்ளது. இசை - சந்தோஷ் நாராயணன், ஒளிப்பதிவு - முரளி.

சார்பட்டா பரம்பரை படத்தின் படப்பிடிப்பு, கடந்த டிசம்பர் மாதம் நிறைவுபெற்றது.

ADVERTISEMENT

இந்நிலையில் சார்பட்டா படத்தின் கதாபாத்திரங்களை அறிமுகம் செய்யும் விதத்தில் விடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT