செய்திகள்

மாஸ்டர் கதாபாத்திரத்தை முன்வைத்து மீம் உருவாக்கியவர்களுக்கு நடிகர் ஷாந்தனு பதிலடி

27th Mar 2021 11:17 AM

ADVERTISEMENT

 

மாஸ்டர் படத்தில் தனக்குத் தேசிய விருது கிடைப்பது போல மீம் உருவாக்கி கிண்டல் செய்பவர்களுக்குப் பதிலடி தந்துள்ளார் நடிகர் ஷாந்தனு.

விஜய் நடித்த மாஸ்டர் படத்தில் பார்கவ் என்கிற சிறிய வேடத்தில் கல்லூரி மாணவனாக நடித்திருந்தார் ஷாந்தனு. இந்நிலையில் அந்தப் படத்துக்காக ஷாந்தனுவுக்குச் சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது கிடைப்பது போன்று ஒரு மீம் உருவாக்கப்பட்டுள்ளது. இதைத் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து ஷாந்தனு கூறியதாவது:

ஒருவர் மற்றவரைக் கிண்டல் செய்வது மூலமாகக் கிடைக்கும் அற்ப சந்தோஷம். இதுபோன்ற கிண்டல்களால் சோர்வடைந்துவிட்டேன். என்மீது தெரிந்தோ தெரியாமலோ வீசப்படும் கற்களுக்கு நன்றி. அது இந்த உலகுக்கு ஒரு செய்தியைச் சொல்லும். நீங்களே சொல்லிவிட்டீர்கள். நடக்காமல் போய்விடுமா? இது ஒருநாள் நடக்கும், அப்போது என் பதில் இதுதான் என ஸ்மைலியைப் பதிலாகத் தந்துள்ளார். 

ADVERTISEMENT

Tags : Shanthanu memes
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT