செய்திகள்

ஆர்ஆர்ஆர் படப்பிடிப்பில் ராம் சரண் பிறந்த நாள் கொண்டாட்டம் (விடியோ)

27th Mar 2021 03:58 PM

ADVERTISEMENT

 

நடிகர் ராம் சரணின் பிறந்த நாளைக் கொண்டாடி அதன் விடியோவை வெளியிட்டுள்ளது ஆர்ஆர்ஆர் படக்குழு.

ஜூனியர் என்டிஆர், ராம் சரண் நடிப்பில் டிவிவி தனய்யா-வின் டிவிவி எண்டெர்டயிண்மெண்ட் இப்படத்தைத் தயாரிக்கிறது. முதல்முறையாக ஜூனியர் என்டிஆரும் ராம் சரணும் இணைந்து நடிக்கிறார்கள். ராஜமெளலியும் ஜூனியர் என்டிஆரும் இதற்கு முன்பு மூன்று படங்களில் இணைந்துள்ளார்கள். மகதீராவுக்குப் பிறகு ராஜமெளலியும் ராம் சரணும் இப்படத்தில் மீண்டும் இணைகிறார்கள். ஆர்ஆர்ஆர் படத்துக்கு கீரவாணி இசையமைக்கிறார். ஒளிப்பதிவு - கே.கே. செந்தில் குமார்.

அல்லுரி சீதா ராமராஜூ, கொமரம் பீம் என்கிற இரு சுதந்திரப் போராட்ட வீரர்களை வாழ்க்கையை முன்வைத்து ஆர்ஆர்ஆர் படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் கதை 1920களில் நடைபெறுகிறது.

ADVERTISEMENT

பாலிவுட் நடிகர்கள் அஜய் தேவ்கன், ஆலியா பட், தமிழ் நடிகர் சமுத்திரக்கனி, ஒலிவியா மாரிஸ், ஸ்ரியா சரண் போன்றோரும் நடிக்கிறார்கள். ஆர்ஆர்ஆர் படம் அக்டோபர் 13 அன்று தெலுங்கு, தமிழ், ஹிந்தி, மலையாளம் மற்றும் இதர இந்திய மொழிகளில் வெளியாகவுள்ளது. ஆர்ஆர்ஆர் படத்தை தமிழகத்தில் திரையரங்குகளில் வெளியிடும் உரிமையை லைகா நிறுவனம் பெற்றுள்ளது. 

ஆர்ஆர்ஆர் படத்தில் அல்லுரி சீதா ராமராஜூ கதாபாத்திரத்தில் நடிக்கிறார் ராம் சரண். அவருடைய பிறந்த நாளுக்காகப் புதிய போஸ்டர் நேற்று வெளியிடப்பட்டது. 

இந்நிலையில் ராம் சரணின் பிறந்த நாள் இன்று ஆர்ஆர்ஆர் படப்பிடிப்பில் கொண்டாடப்பட்டது. இதன் விடியோவைப் படக்குழு வெளியிட்டுள்ளது.

Tags : Ram Charan RRR Movie
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT