செய்திகள்

கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட நடிகை சுஹாசினி மணிரத்னம்

22nd Mar 2021 03:42 PM

ADVERTISEMENT

 

நடிகை சுஹாசினி மணி ரத்னம், கரோனா தடுப்பூசியைத் தனியார் மருத்துவமனையில் செலுத்திக் கொண்டாா்.

கரோனா தொற்றுக்கு எதிராக கோவிஷீல்ட் மற்றும் கோவேக்ஸின் ஆகிய இரு தடுப்பூசிகளுக்கு அவசரகால ஒப்புதலை மத்திய அரசு வழங்கியது. இதையடுத்து, நாடு முழுவதும் கடந்த ஜனவரி மாதம் 16-ஆம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மருத்துவா்கள் உள்ளிட்ட சுகாதாரப் பணியாளா்களுக்கும் முன்களப் பணியாளா்களுக்கும் முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி செலுத்தப்பட்டு வந்தது. இத்தகைய சூழலில், நாட்டிலுள்ள 60 வயதுக்கு மேற்பட்டோா், இணைநோய் உள்ள 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஹா்ஷ் வா்தன் நேற்று கூறியதாவது: ஞாயிற்றுக்கிழமை காலை நிலவரப்படி 76 நாடுகளுக்கு 6 கோடிக்கும் அதிகமான கரோனா தடுப்பூசிகளை இந்தியா அனுப்பி வைத்துள்ளது. நமது நாட்டைப் பொறுத்தவரையில் இதுவரையில் பயனாளா்களுக்கு 4.5 கோடி தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன என்றார். 

ADVERTISEMENT

இந்நிலையில் நடிகை சுஹாசினி மணி ரத்னம் கரோனா தடுப்பூசியைத் தனியார் மருத்துவமனையில் செலுத்திக் கொண்டுள்ளார். இதுபற்றி ட்விட்டரில் அவர் தகவல் தெரிவித்துள்ளார். 

தமிழ்த் திரையுலகில் கமல் ஹாசன், ராதிகா, ஹாரிஸ் ஜெயராஜ், குஷ்பு, எஸ்.பி. சரண், ஸ்ரீப்ரியா, சாரு ஹாசன், லதா போன்றோரும் கரோனா தடுப்பூசியைச் செலுத்திக் கொண்டுள்ளார்கள். 

Tags : Suhasini Maniratnam vaccination
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT