செய்திகள்

கர்ணன் பட டீசர்: செவ்வாய் இரவு 7.01 மணிக்கு!

22nd Mar 2021 02:36 PM

ADVERTISEMENT

 

பரியேறும் பெருமாள் படத்தை இயக்கிக் கவனம் பெற்ற இயக்குநர் மாரி செல்வராஜின் அடுத்த படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார் தனுஷ். கர்ணன் என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை தாணு தயாரித்துள்ளார். இசை - சந்தோஷ் நாராயணன். இந்தப் படமும் தனது முதல் படம் போல முக்கியமான பிரச்னையைப் பேசும் என்கிறார் மாரி செல்வராஜ். இந்தப் படத்தில் மூன்று கதாநாயகிகள் நடித்துள்ளார்கள். மலையாள நடிகை ரஜிஷா விஜயன், 96 புகழ் கெளரி, லக்‌ஷ்மி குறும்படப் புகழ் லட்சுமி ப்ரியா சந்திரமெளலி ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். ஜுன், ஃபைனல்ஸ், ஸ்டாண்ட் அப் படங்களில் நடித்த ரஜிஷா நடித்துள்ள முதல் தமிழ்ப் படம் இது. கடந்த டிசம்பர் மாதம் கர்ணன் படப்பிடிப்பு நிறைவுபெற்றது.

சந்தோஷ் நாராயணனின் பாடல்களுக்கு அதிக வரவேற்பு கிடைத்த நிலையில் நாளை (மார்ச் 23) இந்திய நேரம் இரவு 7.01 மணிக்கு கர்ணன் டீசர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கர்ணன் படம் திரையரங்குகளில் ஏப்ரல் 9 அன்று வெளியாகவுள்ளது. 

ADVERTISEMENT

Tags : Karnan teaser
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT