செய்திகள்

நடிகர் தீப்பெட்டி கணேசன் காலமானார்

22nd Mar 2021 10:51 AM

ADVERTISEMENT

 

குணச்சித்திர நடிகர் தீப்பெட்டி கணேசன் உடல்நலக்குறைவால் காலமாகியுள்ளார்.

தென்மேற்குப் பருவக்காற்று, ரேணிகுண்டா, பில்லா 2, நீர்ப்பறவை, கண்ணே கலைமானே, கோலமாவு கோகிலா போன்ற படங்களில் நடித்தவர் தீப்பெட்டி கணேசன். கடந்த சில வருடங்களாகத் திரைப்பட வாய்ப்புகள் சரியாக இல்லாததால் வேறு தொழில்களிலும் ஈடுபட்டார். கடந்த வருடம் கரோனா ஊரடங்கால் தான் வறுமையில் வாடுவதாக விடியோ ஒன்றை வெளியிட்டார் தீப்பெட்டி கணேசன். தன்னுடைய நிலை நடிகர் அஜித்துக்குத் தெரிந்தால் நிச்சயம் உதவுவார் என்றும் அவர் கூறியிருந்தார். இதையடுத்து நடிகர் ராகவா லாரன்ஸும் கவிஞர் சிநேகனும் தீப்பெட்டி கணேசனுக்கு நிதியுதவி செய்தார்கள்.

இந்நிலையில் உடல்நலக்குறைவால் இன்று காலை மதுரை அரசு மருத்துவமனையில் தீப்பெட்டி கணேசன் காலமானார். 

ADVERTISEMENT

இயக்குநர் சீனு ராமசாமி ட்விட்டரில் கூறியதாவது: 

எனது படங்களில்  நடித்து வந்த சிறந்த நடிகன் தம்பி கார்த்தி என்ற தீப்பெட்டி கணேசன் உடல்நலக்குறைவு காரணமாக மதுரை இராஜாஜி அரசு மருத்துவமனையில் காலமான செய்தி கேட்டு உள்ளம் கலங்கினேன்.அன்புநிறை
இதய அஞ்சலி கணேசா என்று கூறியுள்ளார். 

Tags : Theepetti Ganesan Film actor
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT