செய்திகள்

திரைப்பட தேசிய விருதுகள்: முழுப் பட்டியல்

22nd Mar 2021 05:50 PM

ADVERTISEMENT

 

67-வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு வருடத்திலும் ஏப்ரல் மாதம் திரைப்பட தேசிய விருதுகள் குறித்த அறிவிப்பு வெளியாகும். ஆனால் கடந்த வருடம் கரோனா அச்சுறுத்தல் மற்றும் ஊரடங்கு காரணமாக தேசிய விருது அறிவிப்பு ஒத்திவைக்கப்பட்டது. 

இந்நிலையில் இன்று அறிவிக்கப்பட்ட தேசிய விருதுகளுக்கான பட்டியலில் அசுரன் மற்றும் ஒத்த செருப்பு ஆகிய இரு தமிழ்ப் படங்களுக்கும் தலா இரு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கிய அசுரன் படம்,  சிறந்த தமிழ்ப் படத்துக்கான தேசிய விருதைப் பெற்றுள்ளது. 

ADVERTISEMENT

அஜித் நடித்த விஸ்வாசம் படத்தின் பாடல்களுக்காக இசையமைப்பாளர் இமானுக்கு சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது கிடைத்துள்ளது. 

அசுரன் படத்தில் நடித்ததற்காக தனுஷுக்குச் சிறந்த நடிகருக்கான விருதும் சூப்பர் டீலக்ஸ் படத்தில் நடித்ததற்காக விஜய் சேதுபதிக்கு சிறந்த துணை நடிகருக்கான விருதும் அறிவிக்கப்பட்டுள்ளன.

பார்த்திபன் நடித்து இயக்கிய ஒத்த செருப்பு படத்துக்கு நடுவர்களின் சிறப்புப் பரிசு கிடைத்துள்ளது. இந்தப் படத்துக்காக ரசூல் பூக்குட்டிக்கு சிறந்த ஒலிப்பதிவுக்கான விருது கிடைத்துள்ளது. கேடி (எ) கருப்புதுரை படத்தில் நடித்த நாக விஷால் சிறந்த குழந்தை நட்சத்திரமாகத் தேர்வாகியுள்ளார்.

தேசிய விருதுகள்: முழுப் பட்டியல்

சிறந்த படம் - மரைக்காயர் (மலையாளம்)

சிறந்த இயக்குநர் - சஞ்சய் பூரண் சிங் செளகான் (ஹிந்தி)

சிறந்த நடிகை - கங்கனா ரணாவத் (மணிகர்னிகா & பங்கா)

சிறந்த நடிகர் - தனுஷ் (அசுரன்), மனோஜ் பாஜ்பாய் (போஸ்லே)

சிறந்த அறிமுக இயக்குநர் - மதுகுட்டி சேவியர் (ஹெலன்)

நர்கீஸ் தத் தேசிய ஒருமைப்பாடு விருது - தாஜ்மஹால் (மராத்தி)

சிறந்த பொழுதுபோக்குப் படம் - மஹர்ஷி (தெலுங்கு)

சமூக நலனுக்கான சிறந்த படம் - ஆனந்தி கோபால் (மராத்தி)

சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கான சிறந்த படம் - வாட்டர் பரியல் (மோன்பா)

சிறந்த துணை நடிகர் - விஜய் சேதுபதி

சிறந்த துணை நடிகை - பல்லவி ஜோஷி

சிறந்த குழந்தை நட்சத்திரம் -  நாக விஷால் (கேடி (எ) கருப்புதுரை)

சிறந்த பாடகர் - பி ப்ராக் (கேசரி, ஹிந்தி)

சிறந்த பாடகி - சவானி ரவிந்திரா (பார்டோ, மராத்தி)

சிறந்த வசனம் - தி தாஷ்கண்ட் ஃபைல்ஸ் (ஹிந்தி)

சிறந்த திரைக்கதை (தழுவல்) - கும்நமி

சிறந்த அசல் திரைக்கதை - ஜேயஸ்தோபுத்ரோ (வங்காளம்)

சிறந்த ஒலி அமைப்பு (Re-recordist of final mixed track) - ரசூல் பூக்குட்டி (ஒத்த செருப்பு)

சிறந்த ஒலி அமைப்பு - லியுடஹ் (காஸி)

சிறந்த படத்தொகுப்பு - நவீன் நூலி (ஜெர்ஸி, தெலுங்கு)

சிறந்த கலை இயக்கம் - ஆனந்தி கோபால் (மராத்தி)

சிறந்த ஒப்பனை - ரஞ்சித் (ஹெலன், மலையாளம்)

சிறந்த இசையமைப்பாளர் - இமான் (விஸ்வாசம்)

சிறந்த பின்னணி இசை - பிரபுத்தா பானர்ஜி (வங்காளம்)

சிறந்த பாடலாசிரியர் - பிரபா வர்மா (கொலாம்பி, மலையாளம்)

சிறந்த ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் - மரைக்காயர் (மலையாளம்)

சிறந்த நடனம் - ராஜு சுந்தரம் (மஹர்ஷி, தெலுங்கு)

திரையுலகுக்கு ஏற்ற மாநிலம்  -  சிக்கிம்

சிறப்பு விருது - ஒத்த செருப்பு

சிறந்த ஆடை வடிவமைப்பு - சுஜித் சுதாகரன், வி. சாய் (மரைக்காயர், மலையாளம்)

சிறந்த சண்டை இயக்கம் - அவனே ஸ்ரீமன்நாராயணா (கன்னடம்)

சிறந்த ஒளிப்பதிவு - கிரிஷ் கங்காதரன் (ஜல்லிக்கட்டு, மலையாளம்)

சிறந்த குழந்தைகள் படம் - கஸ்தூரி (ஹிந்தி)

Tags : National Film Awards
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT