செய்திகள்

ஹரி - அருண் விஜய் படம்: பழனியில் தொடங்கிய படப்பிடிப்பு

16th Mar 2021 05:48 PM

ADVERTISEMENT

 

ஹரி இயக்கும் 16-வது படத்தில் அருண் விஜய் கதாநாயகனாக நடிக்கிறார்.

ஹரி இயக்கிய சாமி 2 படம் 2018-ல் வெளியானது. ஆறு மற்றும் சிங்கம் படத்தின் மூன்று பாகங்களை அடுத்து, சூர்யா - ஹரி கூட்டணி 6-வது தடவையாக அருவா படத்தில் இணைவதாக இருந்தது. எனினும் தற்போது தனது திட்டத்தை மாற்றியுள்ளார் ஹரி. டிரம்ஸ்டிக்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் உறவினர்களான ஹரியும் அருண் விஜய்யும் முதல்முறையாக இணைகிறார்கள். இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு கடந்த டிசம்பர் மாதம் வெளியானது. 

அருண் விஜய்க்கு ஜோடியாக ப்ரியா பவானி சங்கர் தேர்வாகியுள்ளார். பிரகாஷ் ராஜ், ராதிகா, ஜெயபாலன், யோகி பாபு போன்றோரும் நடிக்கிறார்கள். இசை - ஜி.வி. பிரகாஷ். 

ADVERTISEMENT

ஹரி - அருண் விஜய் இணையும் படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு பழனியில் இன்று முதல் தொடங்கியுள்ளது. இதன்பிறகு சென்னை, காரைக்குடி, தூத்துக்குடி ஆகிய பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT