செய்திகள்

மங்காத்தாவை மறுவெளியீடு செய்யுங்க: இயக்குநர் வெங்கட் பிரபு கோரிக்கை

15th Mar 2021 09:32 PM

ADVERTISEMENT

 

சென்னை: நடிகர் அஜித்தின் மங்காத்தா திரைப்படத்தினை மறுவெளியீடு செய்ய வேண்டும் என்று இயக்குநர் வெங்கட் பிரபு கோரிக்கை  வைத்துள்ளார்.

நடிகர் அஜித்தின் 50-ஆவது படமாக வெங்கட் பிரபு இயக்கத்தில் 2011-ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் மங்காத்தா. இந்தப் படத்தினை மு.க.அழகிரியின் மகனான துரை தயாநிதி தனது க்ளவுட் நைன் நிறுவனம் மூலம் தயாரித்திருந்தார்.

இந்நிலையில் நடிகர் அஜித்தின் மங்காத்தா திரைப்படத்தினை மறுவெளியீடு செய்ய வேண்டும் என்று இயக்குநர் வெங்கட் பிரபு கோரிக்கை  வைத்துள்ளார்.  

ADVERTISEMENT

இதுதொடர்பாக துரை தயாநிதியினை  டேக்  செய்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது   

தயாநிதி அழகிரி சார், வருகின்ற மே 1-ம் தேதி 'தல'யின் 50-வது பிறந்த நாள். அன்று நம்ம 'தல 50' ஆன மங்காத்தா படத்தை உங்களுடைய செல்வாக்கைப் பயன்படுத்தி ஏப்ரல் 30-ம் அன்று மறுவெளியீடு செய்தால் ரசிகர்களாகிய நாங்கள் உங்களுக்கு ரொம்பக் கடமைப்பட்டு இருப்போம். பார்த்து செய்யுங்கள்".

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT