செய்திகள்

விக்ரம் - கார்த்திக் சுப்புராஜ் இணையும் படத்தில் வாணி போஜன்

15th Mar 2021 05:59 PM

ADVERTISEMENT

 

விக்ரம் - கார்த்திக் சுப்புராஜ் இணையும் படத்தில் வாணி போஜன் நடிக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

பேட்ட படத்துக்குப் பிறகு தனுஷ் நடித்துள்ள ஜகமே தந்திரம் படத்தை இயக்கியுள்ளார் கார்த்திக் சுப்புராஜ். வொய்நாட் ஸ்டூடியோஸ் மற்றும் ரிலையன்ஸ் எண்டர்டெயிண்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்தில் தனுஷ், ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ, ஐஸ்வர்யா லக்‌ஷ்மி போன்றோர் நடித்துள்ளார்கள். இசை - சந்தோஷ் நாராயணன். கரோனா ஊரடங்கு காரணமாக கடந்த வருடம் மே 1 அன்று வெளியாகவிருந்த இப்படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது. இந்தப் படம் நெட்பிளிக்ஸில் விரைவில் வெளியாகவுள்ளது.

ஜகமே தந்திரம் படத்துக்கு அடுத்ததாக விக்ரம் நடிக்கும் படத்தை இயக்குகிறார் கார்த்திக் சுப்புராஜ். இது விக்ரமின் 60-வது படம். எனவே தற்போதைக்கு சியான் 60 அல்லது விக்ரம் 60 என அழைக்கப்படுகிறது.

ADVERTISEMENT

விக்ரமும் அவருடைய மகன் துருவ்வும் இணைந்து நடிக்கும் இப்படத்துக்கு இசை - சந்தோஷ் நாராயணன். ஆதித்ய வர்மா படத்தின் மூலம் திரையுலகில் துருவ் அறிமுகமானார். இதையடுத்து அடுத்த படத்தில் விக்ரமுடன் இணைந்து நடிக்கிறார்.

விக்ரம் நடித்து வரும் கோப்ரா படத்தைத் தயாரிக்கும் செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ, விக்ரம் - கார்த்திக் சுப்புராஜ் இணையும் படத்தைத் தயாரிக்கிறது.

இப்படத்தில் சிம்ஹா நடிக்கவுள்ளதாகச் சில நாள்களுக்கு முன்பு அறிவிப்பு வெளியானது. இந்நிலையில் இப்படத்தின் வாணி போஜன் நடிக்கவுள்ளதாகவும் இன்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

மார்ச் 10 முதல் விக்ரம் - கார்த்திக் சுப்புராஜ் இணையும் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT