செய்திகள்

நடிகர் ரன்பீர் கபூருக்கு கரோனா பாதிப்பு

9th Mar 2021 01:40 PM

ADVERTISEMENT

 

பிரபல பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர், கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். 

2007-ல் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கிய சாவரியா படத்தில் நடிகராக அறிமுகமானார் ரன்பீர் கபூர். பாலிவுட் பிரபலங்கள் ரிஷி கபூர் - நீது கபூர் மகனான ரன்பீர் கபூர் - வேக் அப் சிட், ராக்கெட் சிங் - சேல்ஸ்மேன் ஆஃப் தி இயர், ராக்ஸ்டார், பர்ஃபி, சஞ்சு போன்ற படங்களில் நடித்து கவனம் பெற்றார். 

இந்நிலையில் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார் ரன்பீர் கபூர். அவருடைய தாயார் நீது கபூர் இன்ஸ்டகிராமில் இதுபற்றி தகவல் தெரிவித்துள்ளார். ரன்பீர் கபூர் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். நன்கு தேறி வருகிறார். வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள அவர் எல்லா விதிமுறைகளையும் பின்பற்றி வருகிறார்  என்று நீது கபூர் கூறியுள்ளார். 

ADVERTISEMENT

ஜூன் 25 அன்று ரன்பீர் கபூர் நடித்த ஷம்சேரா படம் வெளியாகவுள்ளது. 

ADVERTISEMENT
ADVERTISEMENT