செய்திகள்

சட்டப்பேரவைத் தேர்தலால் சிவகார்த்திகேயன் பட வெளியீடு ஒத்திவைப்பு

9th Mar 2021 04:25 PM

ADVERTISEMENT

 

தமிழகத் தேர்தல் காரணமாக சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள டாக்டர் படத்தின் வெளீயீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தை சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸும் கேஜேஆர் ஸ்டூடியோஸும் இணைந்து தயாரித்துள்ளன. இப்படத்தின் தொலைக்காட்சி உரிமையை சன் டிவி நிறுவனம் பெற்றுள்ளது. 

சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக ஹீரோ படம் வெளியானது. தற்போது - டாக்டர், அயலான் என இரு படங்களில் அவர் நடித்து முடித்துள்ளார். 

ADVERTISEMENT

அனிருத் இசையமைப்பில் ஏற்கெனவே இரு பாடல்கள் வெளியான நிலையில் சிவகார்த்திகேயன் எழுதிய சோ பேபி என்கிற புதிய காதல் பாடல் சமீபத்தில் வெளியானது.

டாக்டர் படம் மார்ச் 26 அன்று திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் காரணமாக டாக்டர் பட வெளியீடு ஒத்திவைக்கப்படுவதாகத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. புதிய வெளியீட்டுத் தேதி அடுத்த சில நாள்களில் அறிவிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. 

தமிழக சட்டப்பேரவையின் பதவிக்காலம் மே 24-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. தோ்தல் வாக்குப் பதிவு எண்ணிக்கை மே 2-ம் தேதி நடைபெறும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT