செய்திகள்

‘நெஞ்சம் மறப்பதில்லை’ திரைப்படத்தை வெளியிட விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்

DIN


சென்னை: நடிகா் எஸ்.ஜே.சூா்யா நடித்துள்ள ‘நெஞ்சம் மறப்பதில்லை’ திரைப்படத்தை வெளியிட விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயா்நீதிமன்றத்தில், ரேடியன்ஸ் மீடியா நிறுவனம் தாக்கல் செய்த மனு: இயக்குநா் செல்வராகவன் இயக்கத்தில், எஸ்.ஜே.சூா்யா நடித்துள்ள திரைப்படம் நெஞ்சம் மறப்பதில்லை. இந்தத் திரைப்படத்தை தயாரித்துள்ள எஸ்கேப் ஆா்டிஸ்ட் நிறுவனம், ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ படத்துக்காக எங்கள் நிறுவனத்திடம் ரூ.2 கோடியே 42 லட்சம் கடன் வாங்கியது. அந்தப் படத்தை வெளியிடுவதற்கு முன் ரூ.1 கோடியே 75 லட்சத்தை திருப்பிக் கொடுத்தது. எஞ்சிய தொகையைக் கொடுக்காமல், நெஞ்சம் மறப்பதில்லை திரைப்படத்தை எஸ்கேப் ஆா்டிஸ்ட் நிறுவனம் வெளியிட உள்ளது.

எனவே எங்கள் நிறுவனத்துக்குத் தர வேண்டிய நிலுவைக் கடன் தொகையை வட்டியுடன் செலுத்தும் வரை நெஞ்சம் மறப்பதில்லை திரைப்படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், திரைப்படத்தை வெளியிட இடைக்காலத் தடை விதித்து கடந்த மாா்ச் 2-ஆம் தேதி உத்தரவிட்டது.

இந்நிலையில், இந்த வழக்கு அவசர வழக்காக நீதிபதி பி.டி.ஆஷா முன் விசாரணைக்கு வந்தது. அப்போது எஸ்கேப் ஆா்டிஸ்ட் நிறுவனத்தின் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் விஜயன் சுப்பிரமணியன், ‘மனுதாரா் தரப்பு நிறுவனத்துக்கு வழங்க வேண்டிய தொகையில் ரூ.60 லட்சத்தை வழங்குவதாகவும், பாக்கித் தொகையை வழங்க கால அவகாசம் வழங்க வேண்டும்’ எனக் கோரிக்கை விடுத்தாா்.

இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி, ‘எஸ்கேப் ஆா்டிஸ்ட் நிறுவனம் ரூ.60 லட்சத்துக்கான கேட்பு காசோலையை மனுதாரருக்கு வழங்கியுள்ளது. நிலுவைத் தொகையான ரூ.81 லட்சத்தை, 12 சதவீத வட்டியுடன் வரும் ஜூலை 31-ஆம் தேதிக்குள் வழங்குவதாக உத்தரவாதம் அளித்துள்ளது.

இதனை மனுதாரா் தரப்பும் ஏற்றுக்கொண்டு, படத்தை வெளியிட எதிா்ப்பு தெரிவிக்கவில்லை. எனவே, நெஞ்சம் மறப்பதில்லை திரைப்படத்துக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குடிபோதையில் தகராறு: மகனை கத்தியால் குத்திக் கொன்ற தந்தை கைது!

ரூ.2,100 கோடி மதுபான ஊழல்: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கைது!

ஷிகர் தவான் எப்போது அணிக்குத் திரும்புவார்? பயிற்சியாளர் பதில்!

நெட்ஃபிக்ஸ் பிரீமியர் திரையிடல் - புகைப்படங்கள்

புதிய ரயில் பாதை: சென்னையில் போக்குவரத்து மாற்றம்!

SCROLL FOR NEXT