செய்திகள்

விரைவில் வெளியாகவுள்ள இளையராஜா - யுவன் இசையமைத்த மாமனிதன் பாடல்கள்: இயக்குநர் சீனு ராமசாமி

2nd Mar 2021 04:00 PM

ADVERTISEMENT

 

யுவன் சங்கர் ராஜாவின் தயாரிப்பில் விஜய் சேதுபதி நடித்துள்ள மாமனிதன் படத்தை இயக்கியுள்ளார் சீனு ராமசாமி. தென்மேற்குப் பருவக்காற்று, தர்மதுரை, இடம் பொருள் ஏவல் என சீனு ராமசாமி இயக்கிய மூன்று படங்களில் விஜய் சேதுபதி நடித்துள்ளார். இருவரும் இணைந்துள்ள நான்காவது படமிது. இளையராஜா - யுவன் ஷங்கர் ராஜா ஆகிய இருவரும் இணைந்து இப்படத்துக்கு இசையமைத்துள்ளார்கள். இந்தப் படத்தின் படப்பிடிப்பு 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதமே முடிவடைந்துவிட்டது. மாமனிதன் படத்துக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி உயர் நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது. இதனால் இந்தப் படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்நிலையில் மாமனிதன் படம் பற்றி இயக்குநர் சீனு ராமசாமி ட்விட்டரில் தெரிவித்ததாவது:

மாமனிதன் தலைப்பு ஏற்கெனவே தயாரிப்பாளர் ஜெயசீலன் என்பவரிடம் இருந்தது. அதை முறைப்படி யுவன் சங்கர் ராஜா இரண்டு நாட்களுக்கு முன்பு பெற்றார். ஆகவே மாமனிதன் படத்தின் தலைப்பு எங்கள் படத்திற்கு உறுதியானது. தலைப்பு பெற்றதால் முதல் பார்வை, பாடல் விரைவில் என்று கூறியுள்ளார்.

ADVERTISEMENT

இதையடுத்து இளையராஜா - யுவன் கூட்டணியில் உருவாகியுள்ள மாமனிதன் பாடல்கள் விரைவில் வெளியாகவுள்ளன. 

Tags : Seenu Ramasamy Vijay Sethupathi
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT