செய்திகள்

கதாநாயகன் ஆன ஹர்பஜன் சிங்: மனைவி வியப்பு

2nd Mar 2021 05:41 PM

ADVERTISEMENT

 

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலமாகப் புகழ்பெற்ற இலங்கையைச் சேர்ந்த தமிழ்ப் பெண்ணான லாஸ்லியா, நடிகையாகத் தமிழில் அறிமுகமாகும் படம் - பிரண்ட்ஷிப்.

கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், அர்ஜூன், லாஸ்லியா போன்றோர் நடித்துள்ளார்கள். இயக்கம் - ஜான் பால் ராஜ் & ஷாம் சூர்யா.

இந்தப் படம் மட்டுமல்லாமல் சந்தானம் மூன்று வேடங்களில் நடிக்கும் டிக்கிலோனா என்கிற படத்திலும் ஹர்பஜன் சிங் நடிக்கிறார். தமிழ் ட்வீட்கள் மூலம் சமூகவலைத்தளத்தில் தனக்கென்ன ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கியுள்ள கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், தமிழ்ப் படங்களில் இனி அடிக்கடி இடம்பெறப் போகிறார் எனத் தெரிகிறது.

ADVERTISEMENT

பிரண்ட்ஷிப் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இதையடுத்து ஹர்பஜன் சிங்கின் மனைவியும் நடிகையுமான கீதா பஸ்ரா, ட்விட்டரில் கூறியதாவது:

கதாநாயகனாக நடிக்க இன்று எல்லோரும் ஆசைப்படுகிறார்கள். உங்களின் இந்தப் பக்கத்தைப் பார்ப்பேன் என எப்போதும் எண்ணியதில்லை. படத்தைக் காண ஆவலாக உள்ளேன் என்றார்.

இதற்கு ஹர்பஜன் சிங் வேடிக்கையாகப் பதில் அளித்ததாவது: கதாநாயகியின் கணவர் கதாநாயகன் ஆவதற்கு அந்த வீட்டிலிருந்து தான் பயிற்சியைத் தொடங்கினார் என்றார். 

Tags : Harbhajan Singh Friendship
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT