செய்திகள்

விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்கும் கத்ரினா கைப்

DIN

விஜய் சேதுபதி - இயக்குநர் ஸ்ரீராம் ராகவன் கூட்டணியில் உருவாகும் ஹிந்திப் படத்தில் கதாநாயகியாக கத்ரினா கைப் நடிக்கிறார். 

லாபம், காத்துவாக்குல ரெண்டு காதல், துக்ளக் தர்பார், இயக்குநர் சுந்தர்ராஜனின் மகன் தீபக் சுந்தர்ராஜன் இயக்குநராக அறிமுகமாகும் படம், யாதும் ஊரே யாவரும் கேளிர் ஆகிய படங்களில் விஜய் சேதுபதி நடித்து வருகிறார். 19(1)(a) என்கிற மலையாளப் படத்திலும் நடித்து வருகிறார். இதுதவிர, விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள மாமனிதன், கடைசி விவசாயி, இடம் பொருள் ஏவல் ஆகிய படங்களின் வெளியீடு தாமதமாகியுள்ளது. ஷாஹித் கபூருடன் இணைந்து ஹிந்தி இணையத் தொடர் ஒன்றில் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளார். மணி ரத்னம் தயாரிப்பில் நெட்பிளிக்ஸில் வெளியாகவுள்ள நவரசா இணையத் தொடரிலும் நடித்துள்ளார்.

பாலிவுட்டிலும் அறிமுகமாகிறார் விஜய் சேதுபதி. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள மாநகரம் படத்தின் ஹிந்தி ரீமேக், மும்பைகர் என்கிற பெயரில் பிரபல ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் இயக்கத்தில் உருவாகிறது. விக்ராந்த் மஸ்ஸே, விஜய் சேதுபதி, ரன்வீர் ஷோரே, சஞ்சய் மிஷ்ரா, தன்யா மானிக்தலா, சச்சின் கடேகர் போன்றோர் இப்படத்தில் நடிக்கிறார்கள். 

இதையடுத்து அந்தாதுன் படத்தை இயக்கிய ஸ்ரீராம் ராகவனின் அடுத்த ஹிந்திப் படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார் விஜய் சேதுபதி. கதாநாயகியாக கத்ரினா கைப் தேர்வாகியுள்ளார். இது, 90 நிமிடப் படமாக உருவாகவுள்ளது. 30 நாள்களில் படப்பிடிப்பை முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இப்படத்துக்கான பயிற்சி வகுப்புகளில் கத்ரினா கைப் பங்கேற்றுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

ஹாங்காங்கில் பிறந்த கத்ரினா கைப், 2003-ல் பூம் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். நமஸ்தே லண்டன், நியூ யார்க், ராஜ்நீத்தி, ஏக் தா டைகர், தூம் 3, டைகர் ஜிந்தா ஹை போன்ற படங்களில் நடித்து புகழ் பெற்றார். ரோஹித் ஷெட்டி இயக்கியுள்ள சூர்யவன்ஷி படத்தில் நடித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் வாக்குப்பதிவு சதவிகிதம் குறைந்தது ஏன்?

'கில்லி' மறுவெளியீடு குறித்து நடிகை த்ரிஷா நெகிழ்ச்சி!

ராஃபா நகர் மீது இஸ்ரேல் விமானங்கள் குண்டுவீச்சு! 6 குழந்தைகள் உள்பட 9 பேர் பலி

சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ்க்கு ரூ.12 லட்சம் அபராதம்!

சிசோடியாவின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு!

SCROLL FOR NEXT