செய்திகள்

கரோனா தடுப்பூசியைச் செலுத்திக்கொண்டார் நடிகர் ஆர்யா

24th Jun 2021 05:59 PM

ADVERTISEMENT

 

பிரபல நடிகர் ஆர்யா, கரோனா தடுப்பூசியைச் செலுத்திக்கொண்டார்.

இந்தியாவில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் கடந்த ஜனவரி மாதம் 16-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றன. திரைப்பட மற்றும் தொலைக்காட்சிப் பிரபலங்கள் பலரும் கரோனா தடுப்பூசியைச் செலுத்திக்கொண்டு வருகிறார்கள். இந்தியாவில் இப்போது பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவேக்ஸின், சீரம் நிறுவனத்தில் உற்பத்தி செய்யப்படும் கோவிஷீல்ட், ரஷியாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசிகள் மக்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன.

இந்நிலையில் பிரபல நடிகர் ஆர்யா கரோனா முதல் தவணை தடுப்பூசியைச் செலுத்திக்கொண்டார். இதுகுறித்த தகவலை ட்விட்டரில் பதிவு செய்துள்ளார். கோவிஷீல்ட் தடுப்பூசியைச் செலுத்திக்கொண்ட அவர், விரைவில் அனைவரும் தடுப்பூசியைச் செலுத்திக்கொள்ளவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT