செய்திகள்

நடிகர் அமர சிகாமணி காலமானார்

22nd Jun 2021 11:16 AM

ADVERTISEMENT

 

குணச்சித்திர நடிகர் அமர சிகாமணி மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 70.

தமிழ்ப் படங்கள் மற்றும் தொலைக்காட்சித் தொடர்களில் நடித்தவர் அமர சிகாமணி. 1950-ம் ஆண்டு நவம்பர் 12 அன்று பிறந்தார். அந்நியன், சிவாஜி, சதுரங்கம், ரமணா, எவனோ ஒருவன் போன்ற படங்களிலும் சின்னத்திரையில் பொன் ஊஞ்சல், அகல்யா, சொந்தம், உறவுகள், கதை நேரம் போன்ற தொடர்களிலும் நடித்துள்ளார். கவிஞர், வசனகர்த்தா எனத் தன்னுடைய பல்வேறு திறமைகளையும் வெளிப்படுத்தினார். தமிழக அரசின் கலைமாமணி விருதைப் பெற்றுள்ளார்.

இந்நிலையில் நேற்று அவருக்குத் திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் காலமானார். அமர சிகாமணிக்கு சியாமளா தேவி என்கிற மனைவியும் மூன்று மகன்களும் ஒரு மகளும் உள்ளார்கள். 

ADVERTISEMENT

அமர சிகாமணியின் மறைக்கு சின்னத்திரை கலைஞர்கள், ரசிகர்கள் எனப் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளார்கள். 

Tags : Actor Amarasigamani
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT